Friday, October 8, 2010

மனித உரிமைக்கு போராடிய சீன பிரமுகருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது


மனித உரிமைக்காக சீன அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய சமூக ஆவலருக்கு இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ துறையில் பிரிட்டனை சேர்ந்த டெஸ்ட் டியூப் பேபி முøறையை கண்டுபிடித்த எட்வர்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

நேற்று இலக்கியத்துக்கான விருது பெரு நாட்டை சேர்ந்த மரியோ வர்கோஸ் லோசாவுக்கு கிடைத்தது. இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு சீன நாட்டை சேர்ந்த வியூஜியாபோவுக்கு கிடைத்துள்ளது. பேச்சு சுதந்திரம் தொடர்பான குற்றத்திற்கு தற்போது இவர் சிறையில் இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

1989 முதல் சீன அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர். மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் பல போரட்டங்களை முன் நின்று நடத்தியவர். புரட்சி ஏற்படுத்தும் பல்வேறு நாவல்களை எழுதியவர். இதற்கு முன்னர் இந்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ஒபாமா பெற்றார்.

No comments: